Tuesday, 31 May 2011

தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக், என்ஜினீயரிங் கல்லூரி தொடங்க நடவடிக்கை

தென்காசி,மே 30:  

தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி அமைக்க இப்போது இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார். 

குற்றாலத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  கடந்த இருதினங்களாக தென்காசி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இப்போது என்ன பணிகள் நடைபெற்று வருகின்றன. உடனடி தேவை என்ன, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் எந்தளவில் நடைபெற்றுள்ளன, காலதாமதத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.  

தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் பகுதியில் உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். தென்காசி பகுதியில் ரிங்ரோடு, புதைசாக்கடை திட்டம், தென்காசி தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி மராமத்துப் பணிகள் மேற்கொள்வது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி, குடியிருப்பில் உள்ள குற்றாலம் குடிநீர்த்தேக்கத்தை உடனடியாகப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து வருகிறேன்.  கீழப்பாவூர்,சுரண்டை பகுதியில் உற்பத்தியாகும் காய்கனிகள் மற்றும் விவசாயப் பொருள்களைப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனக் கிட்டங்கி அமைக்கவும், தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி அமைக்கவும் இடத்தைத் தேர்வு செய்து உரிய துறை அமைச்சர்கள் மூலமாக திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.  

சுரண்டையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, செண்பக கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், அரசு மருத்துவமனையில் உடனடியாக சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த காலதாமதம் ஏற்படுமேயானால் நன்கொடையாளர்கள் மூலமாக சிடி ஸ்கேன் வசதி செய்து தரமுடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

மேலும் தனியார் நிறுவனம் மூலம் உயர்தரமான ஸ்கேன் சென்டரை இங்கு தொடங்குவதன் மூலம், சிறிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாகவும், சிடி ஸ்கேன் போன்றவற்றை சட்டப்பேரவை உறுப்பினரின் பரிந்துரைக் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு 50 சவிகித கட்டணத் தள்ளுபடியுடன் மருத்துவ வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன். 

தென்காசி அரசு மருத்துவமனையில் தேவையான அளவு மருத்துவர்களை நியமிக்கவும், கால்நடை மருத்துவமனை அமைக்கவும், சுமார் 500 பேர் பணிபுரியக்கூடிய அளவில் தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தென்காசியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் 1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்


மேலும் பாவூர்சத்திரம், சுரண்டை மற்றும் ஊத்துமலை பகுதியிலும் கிளை அலுவலகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.  

‘பேக்கேஜ்’ சுற்றுலாவுக்கு சரத்குமார் ஏற்பாடு

‘’தென்காசி தொகுதியின் தேவைகள், நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தென்காசி ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும். பாவூர்சத்திரம் பகுதியில் காய்கறி பதப்படுத்தும் குளிர்பதன நிலையம் அமைத்தல்,

சுரண்டையில் கால்நடை மருத்துவநிலையம் அமைத்தல், தென்காசியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைத்தல், செண்பக கால்வாய் திட்டம் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பது தவிர வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் தென்காசி பகுதியில் அணைக்கட்டுகளை ஒருங்கிணைத்து பேக்கேஜ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

பேட்டியின் போது, கட்சியின் அமைப்புச் செயலர் காளிதாசன், கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ்,சுந்தர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுரண்டை பகுதியில்சரத்குமார் நன்றி தெரிவிப்பு

SARATH @ PARX SUPER CAR SHOW - IMAGES
                                                                                                                                        சுரண்டை:சுரண்டை பகுதியில் தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தென்காசி தொகுதி எம்எல்ஏ சரத்குமார் சுரண்டை பகுதியில் உள்ள பரங்குன்றாபுரம், மருதுபுரம், வாடியூர், மரியதாய்புரம், கரையாளனூர், குறிச்சான்பட்டி, குருந்தன்மொழி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல் ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.பின்னர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு இவற்றுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அவர் பேசும்போது: - ""இப்பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளை அதிகாரிகளுடன் கலந்துபேசி அதற்கான தீர்வு காண்பேன். தென்காசி தொகுதியை தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்'' என்றார்.நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் சுரண்டை எஸ்.வி.கணேசன், பாவூர்சத்திரம் காளிதாசன், மாவட்ட சமக செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் பாண்டியாபுரம் கண்ணன், துரை, சேர்ந்தமரம் ராயப்பன், கீழப்பாவூர் ஒன்றிய சமக துணை செயலாளர் ஆர்.வி.ராமர், சிவன், ஆலங்குளம் ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் வாடியூர் அந்தோணிசாமி, தங்கம், பிரபாகரன், வின்சென்ட் நாடார், மாடசாமி, அருள், பரமசிவன், பூண்டிராஜ், திரிகூடபதி சேகர், சுரண்டை பாலன், அரவிந்த் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Monday, 30 May 2011

தென்காசி தொகுதியில் அடிப்படை வசதிகள்நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும்:- சமக தலைவர் சரத்குமார் பேட்டி

http://www.hindu.com/2007/09/01/images/2007090154280401.jpg  

தென்காசி:தென்காசி தொகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன் என எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:""தென்காசி தொகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நடந்துள்ளது, தொய்வான பணிகள் எவை என்பது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அது கிடைக்கப்பெற்ற பிறகு உரியை நடவடிக்கை மேற்கொள்வேன். ஆலங்குளம் யூனியன் பகுதியில் நன்றி தெரிவித்து வருகிறேன். தென்காசி தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஒரு மாதம் ஆகலாம். வரும் ஜூன் 3ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் துவங்குகிறது. கூட்ட தொடர் முடிந்த பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியை தொடர்வேன்.

தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் நாளை (1ம் தேதி) முதல் துவங்கப்படுகிறது. சுரண்டை, பாவூர்சத்திரம், ஊத்துமலை பகுதியில் எம்.எல்.ஏ.அலுவலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தென்காசி பகுதியில் அத்யாவசிய தேவை சர்வீஸ் ரோடு. இதனை உடனே அமைக்க கூறியுள்ளேன். ரிங் ரோடு, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற உரிய ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. குற்றாலம் கோடை கால குடிநீர் தேக்கம் குடியிருப்பில் உள்ளது. இந்த நீர் தேக்கம் 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர் வாரி மராமத்து பணி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.தென்காசியில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் பழைய அரசு ஆஸ்பத்திரியில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன். சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்கப்படும். சுரண்டை செண்பக கால்வாய் சீரமைக்கப்படும். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காலதாமதம் ஆகிறது. இதனால் இதனை அமைக்க நன்கொடையாளர் மூலம் முயற்சி மேற்கொள்கிறேன். தனியார் மூலமாக ஹை லெவல் சி.டி.ஸ்கேன் வைத்து சிறிய அளவிலான பரிசோதனைக்கு இலவசமாகவும், பெரிய அளவிலான சோதனைக்கு எம்.எல்.ஏ.பரிந்துரை கடிதத்துடன் சென்றால் 50 சதவீத மானியத்திலும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சுரண்டை சிவகுருநாதபுரத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்கப்படும். தொகுதி பற்றி முழுமையாக அறிய 3 மாத கால அவகாசம் தேவை. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, சுகாதார வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும். தென்காசி பகுதியில் பெரிய அளவிலான தொழிற்சாலை அமைக்கப்படும். இதன் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். சிற்றாறு தூய்மை படுத்தப்படும். தமிழகத்தில் தென்காசி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன்'' என்றார் எம்.எல்.ஏ.சரத்குமார்.

சமக தலைவர் மற்றும் கட்சி நிரவகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்


  நன்றி :- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையதளம்

ஒரு மாதத்திற்குள் தென்காசி வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்-சரத்குமார்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbSEtib6dppPgBQACEDgxbZlYpIy7HJWhk6QvtpaQxoh_zCPPZ9GV8Zf-WOW2c8CLk_80eai-ceFkpycFkjuZJ6OtL6tDxN0dEnHGA_V3HvHRYd3Yb91k8y2FIMKv_Waabd_poe9WM3YY3/s400/sarath04.jpg

                                                        தென்காசி: ஒரு மாதத்திற்குள் தென்காசிக்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்து, தென்காசியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கவுள்ளேன் என்று நடிகரும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

 தென்காசியில் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் சரத்குமார். தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி கூற தென்காசி வந்த அவர் அங்கு மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது தொகுதி மக்களிடையே அவர் பேசுகையில், தென்காசி தொகுதியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். இன்னும் ஒரு மாதத்திற்குள் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் பணிகளை முடுக்கி விடவுள்ளேன். தொழில்துறையில் மிகவும் பின் தங்கியுள்ளது தென்காசி. இங்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சரத்குமார்.

Saturday, 28 May 2011

தென்காசி எம்.எல்.ஏ.அலுவலகம் "பளிச்''

http://www.koodal.com/cinema/gallery/actor/sarath_kumar/sarath_kumar_25_107201064813123_thumbnail.jpg                                                                      

                                                    தென்காசி:தென்காசியில் எம்.எல்.ஏ.அலுவலகம் புதுப்பொலிவுடன் பச்சை நிறத்தில் பளிச்சிடுகிறது.தென்காசி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் நேற்று முதன் முதலாக தென்காசி தொகுதிக்கு வந்தார். சரத்குமாரை வரவேற்க எம்.எல்.ஏ.அலுவலகமும் தயார் நிலையில் உள்ளது.
தென்காசி தாலுகா அலுவலகம் அருகில் மேலவாலிபன்பொத்தைக்கு செல்லும் வழியில் எம்.எல்.ஏ.அலுவலகம் உள்ளது. பொதுப்பணித் துறையினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தை சுத்தப்படுத்தி பச்சை நிறத்தில் வர்ணம் தீட்டியுள்ளனர். கதவு, சன்னல்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. எம்.எல்.ஏ.தனி அறையில் ஏ.சி.வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கம்ப்யூட்டர் பொருத்தி இணையதள வசதி அளிக்கப்பட உள்ளது.

Friday, 27 May 2011

சமக எம்.எல்.ஏ.எர்ணாவூர் நாராயணன் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.


                                        நான்குநேரி : நான்குநேரி எம்.எல்.ஏ.எர்ணாவூர் நாராயணன் நாளை (28ம் தேதி) முதல் ஜூன் 1ம் தேதி வரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.நான்குநேரி தொகுதியில் போட்டியிட்ட சமக வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின் நாளை (28ம் தேதி) தொகுதிக்கு வருகிறார். இவர் நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்.நாளை பாளை.,ஒன்றிய பகுதியில் மாலை 4 மணி முதல் சுற்றுபயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். சீவலப்பேரியில் துவங்கி மடத்துப்பட்டி, மருதூர், தோணிதுறை, கீழபாட்டம், மணப்படைவீடு, கீழநத்தம், கேடிசிநகர் பகுதியில் நன்றி கூறுகிறார்.29 மற்றும் 30ம் தேதியும் பாளை.,யூனியன் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். 31ம் தேதி மற்றும் ஜூன் 1ம் தேதி களக்காடு யூனியன் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். எம்.எல்.ஏ.வுடன் சமக, அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். இத்தகவலை சமக மாநில துணை செயலாளர் இளஞ்சேரன் தெரிவித்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...