தூத்துக்குடி : தூத்துக்குடியில் அய்யா வைகுண்டரின் அருள்நெறி அன்புவழி மாநாடு நேற்றுநடந்தது. மாநாட்டை முன்னிட்டு பேரணி நடந்தது.தூத்துக்குடி மாவட்ட அய்யாவழி அன்புக்கொடி மக்களின் அய்யா வைகுண்டரின் அருள்நெறி மாநாடு நேற்று தூத்துக்குடியில் நடந்தது. மாநாட்டில் சிறப்புவிருந்தனர்களாக சுவாமிதோப்பு தலைமை பதியைச் சேர்ந்த பையன்ராஜா, பால்பையன், அம்பலப்பதியைச் சேர்ந்த தர்மசீலன், அய்யா வைகுண்டர் நற்பணி மன்ற செயலாளர் நாராயணபெருமாள், தெட்சணத்து துவாராகாபதி ஆறுமுகம், அசம்பதி செல்வராஜா, அன்னை ஜூவ்வலர்ஸ் பழரசம் வினாயகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்மாநாட்டில் காலை 6 மணிக்கு உகப்பணிவிடையும், 8 மணிக்கு அன்னதர்மமும் நடந்தது.மதியம் உச்சிப்பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை அகிலத்திரட்டு கருத்தரங்கம்,மற்றும் கருத்து பரிமாற்றம் நடந்து. அதைத்தொடர்ந்து அய்யாவழி சொற்பொழிவுகள் நடந்தது.மாலையில் காவிக்கொடி பேரணிநடந்தது. சுவாமிதோப்பு சிவச்சந்திரன் தலைமை வகித்தார். அனைத்து பதிகளின பணிவிடையாளர்கள் முன்னிலை வகித்தனர்.பேரணியில் ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.
