Wednesday, 6 June 2012

தலைவரின் 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் முடிந்தது.

"AISMK"Leader Sarathkumar
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் எம்.எல்.ஏ, அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து 4நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடும் வெயிலிலும் தனது தீவிர பிரச்சாரத்தின் மூலம் அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார்.

பிரச்சாரத்த முடித்து கொண்டு திருச்சி வந்தடைந்த சரத்குமாருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து திருச்சி சங்கம் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுடன் அறிமுகம் செய்விக்கப்பட்டது.

சேலத்தில் வருகிற ஜூலை 15ந் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் கட்சி நிர்வாகிகள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தலைவர் சரத்குமார் பேசும் போது கடந்த இடைத்தேர்தலைவிட அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றிபெறும் என்றும் இதற்காக சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபட்டு வருகின்றனர். இந்த ஆலோனை கூட்டத்தில் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் வக்கீல் பன்னீர் செல்வம், மாநகர் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், புறநகர் மாவட்ட செயலாளர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...