Tuesday, 5 June 2012

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,நடிகரும் தென்காசி தொகுதி எம்.எல்.ஏவும் ஆன சரத்குமார் புதுக்கோட்டையில் பிரச்சாரம்

AISMK
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும்,நடிகரும் தென்காசி தொகுதி எம்.எல்.ஏவும் ஆன சரத்குமார் கறம்பக்குடி ஒன்றியம் வெட்டன்விடுதியில் பிரச்சாரம் தொடங்கி கோட்டைக்காடு, புதுப்பட்டி, சூறக்காடு, பெரியன் விடுதி, வானக்கண்காடு ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளரை ஆதிரித்து திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.

அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம்.எல்.ஏக்கள் வாளாஜா, ராஜேந்திரன், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அதிமுக ஒன்றிய வட்ட, கழக செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைவர் சரத்குமார் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நல்லிணக்கத்துடன் பணியாற்றி வருகிறது.

புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம். எதிர்கட்சி தலைவர் சட்டசபைக்கு வந்து மக்கள் பிரச்சனைகளை முறையாக பேசி செயல்படவேண்டும். எதிரிகட்சியாக செயல் படக்கூடாது. இத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லும் கட்சிகள் அதற்கான காரணத்தை சொல்லவில்லை.

பிறந்தநாள் விழாவை கொண்டாடுகின்றனர். மக்கள் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தான் பேசவேண்டும். தமிழக முதல்வர் மக்கள் நலனில் சிந்தனை உள்ளவர். ஆகையால் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்
Related Posts Plugin for WordPress, Blogger...