Tuesday, 28 June 2011

தலைவர் சரத்குமார் முதல்வருடன் சந்திப்பு

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:  தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம். 

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம். இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் சென்னையை அடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட முன்பணம் தர மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே எங்களுக்கு நிலம் தர வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று சரத்குமார் கூறினார்.

நன்றி

Saturday, 18 June 2011

ரேஷன் பொருட்கள் வினியோகம் முறைகேடு வேண்டாம்:- MLA சரத்குமார் வேண்டுகோள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZLHiMPl4VbnPNlQAASWeh0iRkw6uq3I2cJ-z_2ebxlWOn-VHbPxQ9gfXLv9XvF3027w_MG1lv-7O6pKyD40KhdzAHLRCUfOj7C60f_-gsJKGWs3avxAwFvma0S4pirLJ524fcAwNmarAj/s1600/Sarathkumar_Birthday_Celebration_05.jpgதென்காசி : "ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்வதில் முறைகேடு வேண்டாம்' என தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமார் கூறியுள்ளார்.

                              ரேஷன்  அட்டை உள்ளவர்களுக்கு 20 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முறைகேடுகள் ஏதும் நடக்க கூடாது என முதல்வர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தென்காசியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரேஷன் அரிசி வாங்க செல்லும் பொதுமக்களிடம் மாற்று பொருட்கள் ஏதேனும் வாங்கினால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர் கூறியுள்ளார். இதுபற்றி தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமாரிடம் பொது மக்கள் புகார் கூறினர்.

இதனையடுத்து எம்.எல்.ஏ.சரத்குமார் குறிப்பிட்ட ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது சரத்குமார் கூறும்போது, ""தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானது இலவச அரிசி வழங்கும் திட்டம். இதன் முழு பலன் ஏழைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அரிசி வழங்கும் போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதல்வர் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும். ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்'' என்றார். ரேஷன் கடை ஊழியர்களும் தவறு ஏதும் ஏற்படாமல் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்கிறோம் என்று உறுதியளித்தனர்.
அதன் பிறகு சரத்குமார் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Friday, 17 June 2011

கல்வி முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும்:- சரத்குமார்


தென்காசி:  
கல்வி முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது என்று தென்காசியில் சரத்குமார் எம்எல்ஏ பேசினார். 

தென்காசியில் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளில் 10 வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. 

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி பேசியதாவது, 

அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.

தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும். தென்காசி தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன். 50 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனையாக இருக்கிறது. 

கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வி வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்றார்.


Friday, 10 June 2011

தென்காசியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: சரத்குமார் கோரிக்கை


சரத்குமார்:-

தென்காசியில் என்னையும், நாங்குநேரியில் நாராயணனையும் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். 


கவர்னர் உரையில் வளர்ச்சித் திட்டங்களுக்கும், தொலைநோக்கு திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, 638 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதம் உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ, போலீஸ் துறையை நவீனப்படுத்த வேண்டும். போலீசார் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். 

தென்மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது சமமான வளர்ச்சிக்கு உதவும்.

கிராமப்புற, நகர்ப்புறங்கள் இடையே உள்ள இடைவெளியை தகர்த்து தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். மின் தட்டுப்பாட்டை சமாளிக்க எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தினால், 80 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். உயர்ந்த அம்சங்களைக் கொண்ட பாராட்டத்தக்க கவர்னர் உரையாக இது அமைந்துள்ளது.



நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள்ளன. இதில் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 தாலுகாக்களைக் கொண்டு நெல்லை மாவட்டமும், தென்காசி உள்ளிட்ட 5 தாலுகாக்களைக் கொண்டு தென்காசி மாவட்டமும் உருவாக்கலாம். தென்காசி மருத்துவமனை 36 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். பழங்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கை அமைப்பதுடன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையும் கட்ட வேண்டும். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தால்தான் தொழில் வளர்ச்சி இருக்கும்  

. பாவூர் சத்திரத்தில் வேளாண் விற்பனையகம் அமைக்க வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும். குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தென்காசியில், "தீம் பார்க்' உருவாக்கினால் வருவாய் ஈட்ட முடியும்.

Tuesday, 7 June 2011

சட்ட மேலவை தேவை இல்லை :- அஇசமக தலைவர் சரத்குமார் பேட்டி

அங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேலவை கொண்டு வரப்பட்டது.

அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு  பதவி கொடுக்கவே மேலவை பயன்பட்டது.
மேலவை சரியாக நடந்ததாக வரலாறு இல்லை.மேலவை தேவையற்றது.
மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பேரவைக்கு இணையாக இன்னொரு அமைப்பு தேவையில்லை.என்று தலைவர் சரத்குமார் கூறினர.

Monday, 6 June 2011

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு

நாகர்கோவில், ஜூன் 5:  
ஆரல்வாய்மொழி பொய்கை அணையில் மணல் எடுக்கப்படுவதால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. தியோடர் சேம் அனுப்பியுள்ள மனு:  

ஆரல்வாய்மொழியிலுள்ள பொய்கை அணைப்பகுதியிலிருந்து சுனாமி குடியிருப்புகள் கட்டுவதற்கு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. பல லட்சம் மதிப்புள்ள இந்த மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் நூற்றுக்கணக்கான லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.  கன்னியாகுமரி முதல் தூத்தூர் வரையிலான சுனாமி குடியிருப்புகளுக்காக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இக் குடியிருப்புகளைக் கட்டும் பணி 12 அரசு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டுவதற்கான மணல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து எடுத்துவர ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை முடிக்க இன்னும் 15 மாதகாலம் அவகாசமும் உள்ளது.  இந்நிலையில், அரசு அதிகாரிகள் அனுமதியுடன் பொய்கை அணைப்பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் தோவாளை கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மணல் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக அணைக்குள்ளிலிருந்து மணல் அள்ள அனுமதி அளித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைத் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி அருகே ஆட்டோ-கார் மோதல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்பட 6 பேர் சாவு :- சரத்குமார் இரங்கல்

தென்காசி,ஜூன் 5: தென்காசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது கார் மோதியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இருவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்தனர்.  தென்காசி பாறையடி தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மகன் சுந்தர் (19), மாடசாமி மகன் ராஜாமணி (26), பிச்சையா மகன் செந்தில்குமார் (25), மூக்கையா மகன் கதிரேசன் (27), ராமகிருஷ்ணன் மகன் கார்த்திக் (25), சுப்பிரமணி மகன் சண்முகதாஸ் (27), மற்றொரு பிச்சையா மகன் இசக்கிதாஸ் (23), சுப்பையா மகன் ஐயப்பன்(22). இவர்களில் கார்த்திக் ஆட்டோ வைத்துள்ளார். மற்றவர்கள் கட்டடத் தொழிலாளர்கள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் அனைவரும் கார்த்திக்கின் ஆட்டோவில் பழையகுற்றாலம் அருவிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது, கடையநல்லூரிலிருந்து விக்கிரமசிங்கபுரம் சென்ற கார் தென்காசி-அம்பாசமுத்திரம் சாலையில் வழிமறிச்சான் பகுதியில் வந்து கொண்டிருந்தது.  எதிரே கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.  எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுந்தர், ராஜாமணி, செந்தில்குமார், கதிரேசன், கார்த்திக், சண்முகதாஸ் ஆகியோர் இறந்தனர்.  பலத்த காயமடைந்த இசக்கிதாஸ், ஐயப்பன் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்களில் ஐயப்பன் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  விபத்தில் பலியான செந்தில்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி நகர துணைச் செயலராகவும், கார்த்திக் அக்கட்சியின் நகரப் பொருளாளராகவும் இருந்து வந்தனர்.  குற்றாலம் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.  சரத்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்: விபத்தில் 6 பேர் இறந்ததற்கு ஆர்.சரத்குமார் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.
Related Posts Plugin for WordPress, Blogger...