Friday, 10 June 2011

தென்காசியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: சரத்குமார் கோரிக்கை


சரத்குமார்:-

தென்காசியில் என்னையும், நாங்குநேரியில் நாராயணனையும் வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். 


கவர்னர் உரையில் வளர்ச்சித் திட்டங்களுக்கும், தொலைநோக்கு திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, 638 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதம் உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழ, போலீஸ் துறையை நவீனப்படுத்த வேண்டும். போலீசார் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். 

தென்மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது சமமான வளர்ச்சிக்கு உதவும்.

கிராமப்புற, நகர்ப்புறங்கள் இடையே உள்ள இடைவெளியை தகர்த்து தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். மின் தட்டுப்பாட்டை சமாளிக்க எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தினால், 80 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம். உயர்ந்த அம்சங்களைக் கொண்ட பாராட்டத்தக்க கவர்னர் உரையாக இது அமைந்துள்ளது.



நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள்ளன. இதில் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 தாலுகாக்களைக் கொண்டு நெல்லை மாவட்டமும், தென்காசி உள்ளிட்ட 5 தாலுகாக்களைக் கொண்டு தென்காசி மாவட்டமும் உருவாக்கலாம். தென்காசி மருத்துவமனை 36 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். பழங்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கை அமைப்பதுடன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையும் கட்ட வேண்டும். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தால்தான் தொழில் வளர்ச்சி இருக்கும்  

. பாவூர் சத்திரத்தில் வேளாண் விற்பனையகம் அமைக்க வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றித்தர வேண்டும். குற்றாலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தென்காசியில், "தீம் பார்க்' உருவாக்கினால் வருவாய் ஈட்ட முடியும்.
Related Posts Plugin for WordPress, Blogger...